Latest topics
CONTACT ADMIN

*~*வெயில் பற்றிய குறிப்புகள்*~*

Go down

*~*வெயில் பற்றிய குறிப்புகள்*~*

Post by Tamilkings on Sun Feb 13, 2011 12:09 am

வெயில் பற்றிய குறிப்புகள்



கானல் நீர் அலைபுரண்டோடும்
தார்ச்சாலை ஓரங்களில்- என் பால்யகால
காகிதக் கப்பல்கள் தரைதட்டக்கூடும்
நாளும் ஏறும் தேவதைகளின் எடைதாங்காமல்.

ஜன்னல் கம்பிகளின் வழியே
சாய்ந்து பாயும் சுடு ஒளியில் - என் மனம்
என்னைவிட்டுப்போவதுபோல
மேல்நோக்கி நீந்துகிறது தூசிக்கூட்டம்.

தார்ச்சாலை நெடுகச் சின்னஞ்சிறு குளங்களாக
ஆவிபறக்கத் தேங்கியுள்ளது வெயில்.
அவை நீரில்லாத பிம்பக் குளங்கள் எனத் தெரிந்தும்
சிறுகல் எறிந்து ரசிக்கவும்
குனிந்து முகம் பார்க்கவும்
ஒருகை அள்ளிப் பருகவும்
மூழ்கிக் குளித்துக் கரையேறவும்
பரபரக்கின்றது என் மனசு.

நெடுந்தூரக் கோடைப் பயணத்தை
மந்தகதியில் கடக்கிறது வாகனம்- என் மனமோ
தாவி எளிதில் அடைந்துவிடும் பயண எல்லையை.
என் உடலின் வருகைக்காக அங்கு அது
ஒரு வாடிய பூச்செண்டுடன் காத்திருக்கும் நெடுநேரம்.

செம்புழுதி பறக்கக் கடக்கின்றன வாகனங்கள்.
அவற்றைப் பின்தொடர்ந்து தொடமுயன்று
தோற்கின்றன இலைச்சருகுகள்.
செம்மண்ணின் கொதிநிலை உயர உயர
பற்றி எரியக்கூடும் அவை. இனி இச்சாலை
புகை மிதக்கும் தீச்சாலையாகும்.
avatar
Tamilkings

Posts : 380
Join date : 2011-01-15
Age : 30
Location : Erode

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum